Thursday, December 17, 2009

எங்குமே இருள் நிறைந்திட்டு

எங்குமே இருள் நிறைந்திட்டு
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை
அடிக்கடி தெருமுனையில்
உட்கார்ந்து கொள்கிறேன்
ஒரு நீண்ட நள்ளிரவின் நிசப்தமோ
அல்லது
தெருமுனையில் ஊளையிடும் நாயின் சத்தமோ
எனை காவுகொள்வதில்லை
உறவுகளின் பிரிவுகள் என்னால் உணரப்படுவதில்லை
எங்குமே இருள் நிறைந்துவிட்டது
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை

No comments:

Post a Comment