மணல் மேடுகளில்தான் எண்ணங்களை செதுக்கின்றேன்
காற்றில் பட்டு கறைந்துவிடக்கூடும்
கற்களில் செதுக்க நானொன்றும் சிற்பியல்ல
ஒரு நீண்ட புளியமரத்தில் அமர்ந்திருக்கும்
ஒற்றைக்கால் கொக்கு
ஓடைவற்றும்வரை காத்திருக்ககமுடியாது
சலனமற்ற நீர்த்துளிகளில்தான் முகம்கழுவ வேண்டுமா?
காற்றோடு மிஞ்சிபோகும் எண்ணம்களும்
காற்றினால் அடித்துசெல்லும் எண்ணகளும்
மணல்மேடுகளில்தான் அதிகம்போலும்.
நீண்டுவளர்ந்த புளியமரமோ வற்றாத ஓடையோஇனி
வாழ்வின் எல்லைகளில்தான்
மீதமிருக்கும் நாட்களோடு காத்த்திருக்கிறன்
ஒற்றைக்கால் கொக்காய்
Thursday, October 13, 2011
Wednesday, February 23, 2011
கனவுகளும் நானும்
ஒரு நீண்ட காகிதத்தில் சிதறிக் கிடக்கின்றன என் கனவுகள்
சஹாராவின் சுடுமணலில் சிறு மண்புழுவாய்
துடித்து துடித்து நகர்கிறது சில
ஒரு கோப்பை சுடுநீர் வாங்கி
கனவுகளை கழுவப் போகிறான் நண்பன்
பாவம் கனவுகளின் வலியை உணரமாட்டான்
காகிதத்தை கத்தரித்து கனவுகளை குறை
அவன் சொல்லும் மந்திரம் எனக்கு
கத்தரித்த கனவுகள் இரவுகளில் ஒட்டிக்கொள்ளவது
புரியாத புதிர் எனக்கு
சஹாராவின் சுடுமணலில் சிறு மண்புழுவாய்
துடித்து துடித்து நகர்கிறது சில
ஒரு கோப்பை சுடுநீர் வாங்கி
கனவுகளை கழுவப் போகிறான் நண்பன்
பாவம் கனவுகளின் வலியை உணரமாட்டான்
காகிதத்தை கத்தரித்து கனவுகளை குறை
அவன் சொல்லும் மந்திரம் எனக்கு
கத்தரித்த கனவுகள் இரவுகளில் ஒட்டிக்கொள்ளவது
புரியாத புதிர் எனக்கு
Thursday, December 17, 2009
எங்குமே இருள் நிறைந்திட்டு
எங்குமே இருள் நிறைந்திட்டு
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை
அடிக்கடி தெருமுனையில்
உட்கார்ந்து கொள்கிறேன்
ஒரு நீண்ட நள்ளிரவின் நிசப்தமோ
அல்லது
தெருமுனையில் ஊளையிடும் நாயின் சத்தமோ
எனை காவுகொள்வதில்லை
உறவுகளின் பிரிவுகள் என்னால் உணரப்படுவதில்லை
எங்குமே இருள் நிறைந்துவிட்டது
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை
அடிக்கடி தெருமுனையில்
உட்கார்ந்து கொள்கிறேன்
ஒரு நீண்ட நள்ளிரவின் நிசப்தமோ
அல்லது
தெருமுனையில் ஊளையிடும் நாயின் சத்தமோ
எனை காவுகொள்வதில்லை
உறவுகளின் பிரிவுகள் என்னால் உணரப்படுவதில்லை
எங்குமே இருள் நிறைந்துவிட்டது
இப்பொழுதெல்லாம் என்னால்
நானாக இருக்கமுடிவதில்லை
Wednesday, December 2, 2009
வரவேற்கிறேன்
வரவேற்கிறேன் மயானத்திற்கு
மண்டையோடுகளின் உறைவிடமல்ல
நிழல்களாகிப்போன நிஜங்களின் தளமிது.
இனிக்கவிதை பிறக்கும்,
மயானத்தின் காற்றோடு கலக்கும்
காத்திருக்கிறேன் உணர்வுகளுக்காய்
மண்டையோடுகளின் உறைவிடமல்ல
நிழல்களாகிப்போன நிஜங்களின் தளமிது.
இனிக்கவிதை பிறக்கும்,
மயானத்தின் காற்றோடு கலக்கும்
காத்திருக்கிறேன் உணர்வுகளுக்காய்
Subscribe to:
Posts (Atom)
